உச்சி முதல் பாதம் வரை அதிமருந்தாகும் இலுப்பை மரம் - அழிவின் விளிம்பில் - கண்டுக்கொள்ளாதது ஏன்? அலசுவோம்

benefits tress பயன்கள் Mahua இலுப்பை மரம்
By Nandhini Mar 27, 2022 11:37 AM GMT
Report

இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது. இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது.

வவ்வாலுக்கு பிடித்தமான உணவு என்றால் அது இலுப்பை பழம்தான். அந்த அளவிற்கு இலுப்பை பழம் சுவையாக இருக்கும். அந்த காலத்தில் அரசர்கள், மலைவாழ் மக்கள் வவ்வால்களை வேட்டையாட வேண்டும் என்றால் இலுப்பை மரத்தை நோக்கிதான் செல்வார்கள். ஏனென்றால் வவ்வால்கள் இலும்பை மரத்தில் தான் அதிகமாக வாழும்.

அன்றைய காலத்தில் சர்க்கரை, வெல்லம் கண்டுபிடிக்காதபோது சுவைக்காக மக்கள் இலுப்பை பூவைதான் பயன்படுத்தினார்கள். அந்த அளவிற்கு இலுப்பை மரத்தில் உள்ள பூக்களுக்கு சுவை அதிகமாக இருக்கும்.

இவ்வளவு மருத்துவத் தன்மை வாய்ந்த இலுப்பை மரங்கள் தமிழகத்தில் 1950ம் ஆண்டு காலங்களில் 30,000 மரங்களுக்கும் மேல் அதிகமாக இருந்தன. ஆனால் 2015ம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

இலுப்பை மரத்தின் அழிவால் வவ்வால்களின் வவ்வாலின் அழிவு ஏற்பட்டது. வவ்வால்களின் அழிவால் கொசுவின் வளர்ச்சி அதிகமானது. கொசுக்களின் வளர்ச்சி அதிகமானதால் மனிதனுக்கு வியாதிகளின் அதிகமானது.

விறகு, அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பில் அதிகமாக இலுப்பை மரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இலுப்பை மரம் உப்புநீரை தாங்குவதால் படகுகள் செய்வதற்கு இம்மரங்கள் பயன்கள் அதிகமாக தேவைப்பட்டதால் இம்மரத்தின் அழிவிற்கு இதுவும் ஒரு வகையான காரணமாகும். 

உச்சி முதல் பாதம் வரை அதிமருந்தாகும் இலுப்பை மரம் - அழிவின் விளிம்பில் - கண்டுக்கொள்ளாதது ஏன்? அலசுவோம் | Mahua Trees Benefits

இலுப்பை மரத்தின் பயன்களைப் பற்றி பார்ப்போம் -

நோய்கள் குணமாக

இலுப்பை மரத்தின வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகி விடும்.

இலுப்பை பூவின் பயன்கள்

இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், வெப்பத்தினால் உண்டான சுரம் நீங்கி விடும்.

இலுப்பை எண்ணெய் பயன்கள்

இலுப்பை எண்ணையை சிறிது அனலில் காட்டி இளஞ்சூட்டில் அந்த எண்ணையை விரல்களின் மீது தடவி வர விரைவீக்கம் குணமடைந்து விடும். குறைந்தது 4,5 தடவைகள் செய்தால் விரைவில் வீக்கம் குறைந்து விடும்.

இலுப்பை எண்ணை சருமத்தை மிருதுவாக்கும். முக சுருக்கங்களை போகும் சத்துகள் அதிகமாக இலுப்பை எண்ணெய்யில் நிறைந்துள்ளது.

வாரமொரு முறை இலுப்பை எண்ணெய் உடல் முழுவதும் பூசி, அது நன்கு ஊறிய பின்பு குளித்து வருவதால் தோல் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கி விடும்.