தங்கம் வென்ற அவனிக்கு கார் பரிசு - மஹிந்திராவின் சூப்பர் அறிவிப்பு

Paralympics anand mahindra Avani Lekhara
By Petchi Avudaiappan Aug 30, 2021 04:47 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in மற்றவைகள்
Report

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பிரத்யேக கார் ஒன்றை பரிசாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த அவனிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரை பாராட்டும் விதமாக பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது இன்னும் விற்பனைக்கு வராத மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்யுவி காரின் முதல் காரை தான் அவனி பெறவுள்ளார். இந்த இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று முந்தைய உலக சாதனையை அவனி சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.