மனைவி மற்றும் மகனுடன் சோபர் தீவுக்கு தப்பியோடிய மகிந்த ராஜபக்சே - ஆடியோ வைரல்

Mahinda Rajapaksa Shiranthi Rajapaksa
By Swetha Subash May 10, 2022 12:49 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு நீங்கள் தான் காரணம் எனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர்.

ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெறுக்கடியால் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.

மனைவி மற்றும் மகனுடன் சோபர் தீவுக்கு தப்பியோடிய மகிந்த ராஜபக்சே - ஆடியோ வைரல் | Mahinda Rajapaksa With Wife Fled To Sober Island

பிரதமர் பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது. மேலும், பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்சே இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து அவரது குடும்பம் வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியானது.

மனைவி மற்றும் மகனுடன் சோபர் தீவுக்கு தப்பியோடிய மகிந்த ராஜபக்சே - ஆடியோ வைரல் | Mahinda Rajapaksa With Wife Fled To Sober Island

இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தற்போது இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் திருகோணமலையிலிருந்து தீவு ஒன்றிற்கு தப்பியோடியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, அவரது மனைவி சிராந்தி ராசபக்சே, மகன் ரோஹித ராஜபகசே மற்றும் ஜோன்சன் பெர்னாண்டோ ஆகியோர் திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து ஜெட் படகில் சோபர் தீவுக்கு தப்பியோடிவிட்டதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்சசே குடும்பத்துடன் சோபர் தீவில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் பேசிய நபர் யார் என்பது குறித்தும், அவர் கூறிய தகவல்களின் உண்மை தன்மை குறித்தும் விவரம் ஏதும் தெரியவில்லை.