கடைசி தோட்டா வரை போராடிய பிரபாகரன்.. பயந்து ஓடும் ராஜபக்ச... யார் ஹீரோன்னு இப்ப தெரியுதா?

Mahinda Rajapaksa Sri Lankan protests Sri Lanka Economic Crisis Velupillai Prabhakaran
By Petchi Avudaiappan May 10, 2022 10:31 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

இலங்கையில் நிலவி வரும் பதற்றமான சூழலில் முன்னாள் பிரதமர் ராஜபக்ச வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இணையவாசிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி தங்களது எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் காட்டி வருகின்றனர்.

இலங்கையில் இந்த நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் அரசு பதவிகளில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார்.

இதற்கிடையில் போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார்.  

தற்போது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயிருக்கு பயந்து ஓடும் ராஜபக்சவை, 2009 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடைபெற்ற இலங்கை போரில் கடைசி தோட்டா வரை எங்கும் தப்பிச் செல்லாமல் போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு ஒப்பிட்டு பலருக் கருத்து தெரிவித்துள்ளனர். 

அவரது மரணத்திற்குப் பிறகு இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதி வரை போராடிய வீரன் பிரபாகரனை மதிக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். மேலும் இதுதான் உண்மையான வீரனுக்கும், சூழ்ச்சிகள் நிறைந்த தலைவனுக்கும் உள்ள வித்தியாசம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.