'சாவுங்கடா'... மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை திட்டிய பிரபல நடிகர் - வைரலாகும் டுவிட்

Natty Mahinda Rajapaksa
By Nandhini May 12, 2022 08:13 AM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது.

இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மகிந்த ராஜபக்ச வீடு போராட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

கடும் கோபத்தில் உள்ள இலங்கை மக்கள் கோட்டாபய, மகிந்தாவின் தந்தை ராஜபக்சேவின் நினைவு ஸ்தூபியை உடைத்தெரிந்த மக்கள் சிலையையும் உடைத்து சுக்குநூறாக வீசினர். இதற்கிடையே புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அரசு சார்பில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவர் என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவின் கர்மா இப்போதுதான் வேலை செய்ய தொடங்கியுள்ளது என்று தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகரான நட்டி என்கிற நட்ராஜ், ராஜ பக்ச குடும்பத்தை திட்டி தீர்த்து டுவிட் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மஹிந்த ராஜ பக்‌ஷே..கோத்தபய ராஜபக்‌ஷே.. சாவுங்கடா.. என குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களின் பங்குக்கும் சேர்த்து ராஜ பக்சவையும் அவரது குடும்பத்தையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.