மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் - இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு..!

Mahinda Rajapaksa Sri Lanka Violence 2022
By Thahir May 09, 2022 06:11 PM GMT
Report

இலங்கையில் கடும் பொருளதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவு தான் இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும்,பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மகிந்த ராஜப்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.அங்கு போராட்டக்காரர்களை நோக்கி வந்த மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களிடம் வாக்கும் வாதம் செய்யவே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டக்காரர்களின் கூடாரத்தை மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.இதனிடையே இலங்கை முழுவதும் ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சே இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள பூர்வீக வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

மகிந்த ராஜபக்சே பூர்வீக வீடு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவத்தால் இலங்கையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.