இலங்கையின் புதிய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு மகிந்த ராஜபக்ச வாழ்த்து..!
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ரனில் விக்கிரமசிங்கேவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்தனர். அதளபாதளத்திற்கு சென்ற பொருளாதாரத்தல் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்தது.
இதையடுத்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கினர்.அவர்களின் போராட்டம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 9-ந்த தேதி பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால அரசை அமைக்க அதிபர் கோட்டபய ராஜபக்ச தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

இன்று இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்,இக்கட்டான சூழலில் பொறுப்பேற்றுள்ள நிலையில் நாட்டை வழிநடத்த வாழ்த்துக்கள் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.