மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேற தடை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டபய ராஜபக்ச பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
கலவரமான இலங்கை
எரிவாயு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நாடுகளின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், இலங்கை அதிபர் கோட்டபய நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார்.போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
தப்பியோடிய கோட்டபய
இச்சூழலில், அங்கிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதையடுத்து, மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல தனி ஜெட் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு அந்நாட்டு அரசிடம் கோட்டபய கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.
மாலத்தீவில் கோட்டபயவுக்கு எதிராக எதிர்ப்பு தீவிரமான நிலையில், தனியார் ஜெட் மூலம் மாலத்தீவிலிருந்து சிங்கபூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில்மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தடைபோட்ட நீதிமன்றம்
மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இலங்கையினை விட்டு இருவரும் வெளியேற தடை விதித்துள்ளது இலங்கை நீதி மன்றம்