இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா ஏற்பு..!

Mahinda Rajapaksa Sri Lanka Violence 2022
By Thahir May 09, 2022 07:56 PM GMT
Report

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர்.

இதுபோல் ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இருதரப்பும் கடுமையாக தாக்கிக் கொண்டது. இதையடுத்து, அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.