ரஹானேவை ஒதுக்கி விட்டதே அவர்தான் :சேவாக் அதிர்ச்சி தகவல்

MS Dhoni
By Irumporai Apr 11, 2023 06:34 AM GMT
Report

ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தேர்வாகியுள்ள ரஹானே குறித்தும், தோனி குறித்தும் சேவாக் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தோனி ரஹானே

தற்போது ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வருகின்றது, தற்போது போட்டிகளில் இது வரை 2 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் நடந்து முடிந்த போட்டியில் ரஹானே 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என விளாசி அவுட்டே ஆகாமல் 61 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.

ரஹானேவை ஒதுக்கி விட்டதே அவர்தான் :சேவாக் அதிர்ச்சி தகவல் | Mahi The Other Side Of Dhoni Shevak

ரஹானேவை புகழ்ந்த பலரும், ரஹானேவின் திறமையை சரியாக புரிந்து கொண்டு சரியான நேரத்தில் களத்தில் கேப்டன் தோனி இறக்கி இருக்கிறார் என தோனியையும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சேவாக் பரபரப்பு குறித்து

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ரஹானே மெதுவாக விளையாடுகிறார். அவரால் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய முடியவில்லை என சொல்லி அவரை ஒருநாள் போட்டிகளில் சேர விடாமல் செய்ததே தோனிதான். ஆனால் இப்போது சென்னை அணிக்கு அனுபவம் தேவை என தோனியே ரஹானேவை அணியில் எடுத்துள்ளார், சேவாக்கின் இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.