அடுத்தடுத்து மீளாத துயரத்தில் நடிகர் மகேஷ் பாபு... இறந்த தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்...!

Mahesh Babu
By Nandhini 1 வாரம் முன்

இறந்த தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் மகேஷ் பாபு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் மகேஷ்பாபு

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு.

சகோதரர், தாய் மரணம்

இவருடைய தாயார் இந்திரா தேவி சமீபத்தில் மூப்பு காரணமாக உயிரிழந்தார். இது திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் ரமேஷ் பாபுவின் சகோதரர் உயிரிழந்தார்.

இந்த துக்கம் ஆராத நிலையில், சமீபத்தில் அவரது தாய் இந்திரா தேவி உயிரிழந்தார். 

நடிகர் கிருஷ்ணா மரணம்

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என்று போற்றப்பட்ட நடிகர் கிருஷ்ணா (79) நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையாவர்.

இவர் கடந்த திங்களன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

mahesh-babu-krishna-death

உருக்கமான பதிவு

இந்நிலையில், இறந்த தந்தை கிருஷ்ணாவின் மறைவையொட்டி நடிகர் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நீங்கள் வாழும்போது உங்களை கொண்டாடினார்கள். இறந்த பின் இன்னும் கொண்டாடுகிறார்கள். இதுவே உங்களின் சிறப்பு. நீங்கள் இயற்கையிலேயே துணிச்சல் நிறைந்தவர். என் உத்வேகம். என் தைரியம் அனைத்தும் நீங்கள்தான். திடீரென எல்லாம் சட்டென்று போய்விட்டது.

ஆனால், இப்போது எனக்கு எந்த பயமும் இல்லை. உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது ஒளிரும். உங்களை மேலும் பெருமை அடையச் செய்வேன். தந்தை மறைவையொட்டி நடிகர் மகேஷ் பாபுவின் உருக்கமான பதிவிற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் அடுத்தடுத்து தொடர் மரணங்களால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.