தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு அண்ணன் ,ரமேஷ்பாபு காலமானார் : திரையுலகினர் அஞ்சலி

maheshbabu rameshbabudies
By Irumporai Jan 09, 2022 04:02 AM GMT
Report

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவரது மூத்த சகோதரர் ரமேஷ்பாபு. இவரும் நடிகர் ஆவார்.

இவர்கள் இருவரும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக வலம் வந்த கிருஷ்ணாவின் மகன்கள். இந்த நிலையில் 56 வயதான கட்டமானேனி ரமேஷ் பாபு கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் , உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்துள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை கச்சிபவுலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு அண்ணன் ,ரமேஷ்பாபு காலமானார் : திரையுலகினர் அஞ்சலி | Mahesh Babu Brother Ramesh Babu Dies

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இதையடுத்து, அவரது குடும்பத்தார் மிகுந்த அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளனர்.

பிரபல நடிகரும், பிரபல தயாரிப்பாளருமாக வலம் வந்த ரமேஷ்பாபுவின் மறைவு டோலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ்பாபுவிற்கும், ரமேஷ்பாபு குடும்பத்தாருக்கும் பிரபலங்களும், திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்