என் வீட்டு மின்சாரத்தை எடுத்துக்கோங்க! மாஸ்டர் மகேந்திரன் சர்ச்சை கருத்து
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளவர் மகேந்திரன்.
மாஸ்டர் படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார், குழந்தை நட்சத்திரத்தில் பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக அவருக்கு வெற்றி அமையவில்லை.
இன்று நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மகேந்திரனிடம் மின்வெட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, மின்சாரத்துடன் இவ்வளவு நாள் ஜாலியாக இருந்தவர்கள் ஒரு ஆறு மாதம் இல்லாமல் இருக்க முடியாதா?

என் வீட்டில் இருந்து கூட மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், சோலார் வழியாக எடுத்துக்கொள்ளுங்கள், கேள்வி கேட்காதீங்க, முதல்வரை கேள்வி கேட்பதால் உடனே மின்சாரம் வந்துவிடுமா?
ஆறு மாதம் எதுவும் கேட்காதீங்க, எதாவது கேட்டுகிட்டே இருக்கீங்க என பதிலளித்தார்.
இவரது பேச்சு வைரலாக பலரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.