மக்கள் நீதி மய்யத்திலிருந்து மகேந்திரன் விலகல்
Kamal
Tamil Nadu
Mahendran
Makkal Needhi maiam
By mohanelango
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஐந்தாவது இடம் பிடித்து கடந்து முறை பெற்ற வாக்கு சதவிகிதத்தை விடவும் குறைந்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் கடுமையான போட்டிக்குப் பிறகு பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் 2000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் கடுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கமல் தெரிவித்திருந்தார்.
தற்போது மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் பல நிர்வாகிகளும் கட்சியிலிருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.