மக்களின் வலியை அவமதிக்கவில்லை- சர்ச்சைக்கு விளக்கம் அளித்த மகேந்திரன்
மின்சாரத் தடை குறித்து நடிகர் மகேந்திரன் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், அவர் தற்போது அதற்கு விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? என்ற கருத்து பொதுமக்களை நோக்கி கூறப்படவில்லை என்றும், மின்சாரத் தடையை அரசியலாக்குபவர்களை குறிப்பிட்டே பேசியதாகவும் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் விஜய் ஆறு மாத கால அவகாசம் கேட்டிருந்ததால், அவர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் ஆறு மாதம் எதுவும் கேட்காதீர்கள் என்ற கருத்தை தெரிவித்ததாக கூறினார்.
சோலார் பவர் என்பதற்கு பதிலாக தவறுதலாக சோலார் சிஸ்டம் என கூறிவிட்டதாகவும் விளக்கமளித்தார்.
கொச்சி விமான நிலையம் முழுவதும் சோலார் மின்சாரத்தில் இயங்குவதை பார்த்து, நம்மிடமும் அதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தலாம் என்ற எண்ணத்தில்தான் அந்த கருத்தை கூறினேன் என்றார்.
என் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற பேச்சும் மக்களின் கஷ்டத்தை கேலி செய்யும் நோக்கத்தில் கூறப்படவில்லை என்றார்.
மேலும், நானும் மற்றவர்களைப் போலவே சிரமங்களை சந்தித்துதான் வருகிறேன் என்றும் கூறினார்.
இன்று ஒருவேளை உணவு உண்கிறேன் என்றால் அது இந்த மக்கள் கொடுத்ததுதான், அவர்களின் வலியை ஒருபோதும் அவமதிக்க மாட்டேன் என்று கூறினார்.
தனது பேச்சால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.