இந்திய அணியின் ஈடு இணையில்லா கேப்டன் தல தோனி !
இந்திய அணியின் ஈடு இணையில்லாத கேப்டன் தல தோனி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறர்.
எம். எஸ். தோனி
ஜூலை 7 1981ஆம் ஆண்டு பீகார் மாநிலம் ஜார்கெண்டில் பிறந்தார் . இவரின் தந்தை நரேந்திர சிங் மற்றும் தாய் ரஜனிபீகார் இவருக்கு மகேந்திர சிங் தோனி என்று பெயர் சூட்டினர் .
பின்னர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அருகில் உள்ள ஷியாமலியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அவர் ஒரு முன்மாதிரியான மாணவர்-விளையாட்டு வீரர், ஆனால் அவர் பூப்பந்து மற்றும் கால்பந்தை விரும்பினார். அவர் பள்ளியின் கோல்கீப்பராக இருந்தார்.
தோனியும் உலகக்கோப்பையும்
2007 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம். எஸ். தோனி அப்போது நடைபெற்ற டீ 20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு முதல் டீ 20 உலகக்கோப்பை பெற்றுத்தந்தார்.
கடைசி ஓவரில் ஜோகிந்தர் ஷர்மா வீசிய ஸ்கூப் பந்தை மிஸ்பா-உல்-ஹக் ஆட, பந்து மேலே செல்ல அனைவரும் சிக்ஸர் என்று தலையில் கை வைத்த நிலையில், உயர சென்ற பந்து நேராக ஸ்ரீசாந்தின் கைகளில் சிக்கியது.
இதனால் இந்திய அணி முதன் முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி முதன் முதலாக உலகக்கோப்பையை வென்றது அதன் பிறகு வந்த எந்த கேப்டன்களும் உலகக்கோப்பையை வெல்லவில்லை . ஆனால் அதனை முறியடித்துக் காட்டினார் மகேந்திர சிங் தோனி.
2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் கடைசி பந்தில் தோனி ஸ்டைலில் அதிரடியான சிக்ஸர் அடித்து உலகக்கோப்பையை வென்றார் எம்.எஸ். தோனி. இதன் காரணமாக மேலும் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் அவர். அந்த கடைசி பந்தில் சுனில் கவாஸ்கரின் கமெண்ட்டரி இன்றளவும் கேட்க்கும்போது ரசிகர்களுக்கு புல்லரிக்கும். இது சச்சின் டெண்டுல்க்கருக்காக அவர் கொடுத்த பரிசு என்று ரசிகர்கள் பேசுகின்றனர். இதுதான் சச்சின் டெண்டுலக்கரின் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைப் பையன் தல தோனி
2008 ஆம் ஆண்டு முதன் முதலாக மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர்தான் அன்று முதல் இன்று வரை சென்னை அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்சில் தோனி இடம் பிடித்த பிறகு தமிழக மக்களின் அன்பு அதிகப்படியாக அவர் மீது உயரத் தொடங்கியது. இவர் சென்னை அணிக்காக இதுவரை விளையாடி (2010,2011,2018,2020,2023) ஆண்டுகளில் 5 கோப்பைகளை பெற்றுத்தந்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவரை தல என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
ஒய்வு
2019ல் நடைபெற்ற உலகப்பகோப்பையின் பின் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்தார். இது தோணி ரசிகர்களையும் இந்திய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் அவர் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவேன் என தெரிவித்ததுதான் ரசிகர்களுக்கு ஒரு மன நிம்மதியாக இருக்கிறது. அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் மற்றும் இந்திய அணியின் ஈடு இணையில்லாத தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மகேந்திரசிங் தோனி.