யாராலும் நெருங்க முடியாத தல தோனியின் 7 சாதனைகள் !!
மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் ஒரு வீரராக களமிறங்கி அதன்பின்னர் இந்திய அணிக்கு ஒரு கேப்டனாக தலைமைதாங்கி 2007ஆம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பை தொடரையும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரையும், 2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரையும் கைப்பற்றி கொடுத்தார்.
ஒரு இந்திய கேப்டன் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்று ஐசிசி தொடர் கோப்பைகளை கைப்பற்றி கொடுத்தது இதுவே முதல் முறை. அதே சமயம் ஒரு வீரராக மிகச் சிறப்பாக இந்திய அணிக்காக பல போட்டிகளில், இறுதியில் களம் இறங்கி விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி கடைசியாக விளையாடிய ஐசிசி தொடர் 2019ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகும். மகேந்திர சிங் தோனி 20 ஓவர் உலக கோப்பை தொடர் நிச்சயமாக விளையாடி விட்டு ஓய்வு பெறுவார் என்று அனைவரும் நினைத்த வேளையில் சத்தமே இல்லாமல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிட்டார்.
சர்வதேச போட்டியில் ஐசிசி நடத்தப்படும் அனைத்து விதமான தொடர்களிலும் இந்திய அணி கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக 2007 இல் நடந்த டி20 உலக கோப்பை தொடர் மற்றும் 2011இல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற அனைத்து தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் ஐசிசி தொடரால் நடத்தப்பட்ட போட்டிகளில் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார் இன்றுவரை அந்த ஒரு
சாதனையை எந்த ஒரு வீரரும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.