அடுத்தமுற உனக்கு பவுலிங் கிடையாது.. கறாராக சொல்லிய தோனி - தீக்ஷனா பகிர்ந்த சீக்ரெட்!
சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையையும் சென்னை அணி சமன் செய்தது.
இந்நிலையில் சென்னை அணிக்காக விளையாடிய இலங்கை பவுலர் மகேஷ் தீக்ஷனா, வெற்றிக்கு பிறகு தோனியுடன் நடந்த சுவாரஸ்யமான உரையாடல் குறித்து பகிர்ந்துள்ளார்.
பந்துவீச்சு கிடையாது
அதில், "கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டி வெற்றிக்கு பிறகு, நானும் பத்திரனாவும் உடனடியாக இலங்கை திரும்ப வேண்டியிருந்தது.
இறுதிப்போட்டிக்குப் பிறகு, சிஎஸ்கே தரப்பில் விருந்து வைக்கப்பட்டது. அதில் இருந்து நாங்கள் விடைபெற இருந்தபோது கேப்டன் தோனியை சந்திக்க சென்றோம்.
அப்போது அவர் என்னை கட்டியணைத்து அடுத்த முறை உனக்கு பந்துவீச்சு கிடையாது, பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டுமே" என்று கூறினார்.