மகாத்மா காந்தி நினைவு நாள்; உருவ படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மலர் துாவி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் ஒன்றாக இன்று எழும்பூரில் உள்ள காந்தி சிலை அருகே, மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
ஆளுநர், முதலமைச்சர் மரியாதை
மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் இறந்த தினமான ஜனவரி 30 ஆண்டு தோறும் அவரது நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவு தினத்தை தமிழ்நாடு அரசு சார்பில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் ஒன்றாக எழும்பூரில் உள்ள காந்தி சிலை அருகே, மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் அறிய புகைப்படத் தொகுப்பு ‘காந்தியும் உலக அமைதியும்’ எனும் பெயரில் நிறுவப்பட்டுள்ள அருகாட்சியகத்தை இருவரும் ஒன்றாக பார்வையிட்டனர்.
தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி
இந்த நிகழ்வில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் சாமிநாதன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த அருகாட்சியகத்தில் செல்ஃபி ஸ்பாட் எனும் ஒரு இடமும் நிறுவப்பட்டுள்ளது. அதில் காந்தி பற்றிய புத்தகங்களின் முதல் பக்கம் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகம் சென்று அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அரசு அதிகாரிகள் உடன் எடுக்க கொண்டார்.