காந்தியை கொன்றது கோட்சே இல்லையா?..கூட்டத்தில் புகுந்து தடுத்த காவல்துறை அதிகாரிகளால் பரபரப்பு

Police Memorial Day Mahatma Gandhi Argument CPM CPI
By Thahir Jan 30, 2022 01:21 PM GMT
Report

மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.

உறுதிமொழிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுதிமொழி வாசித்தார்.

அப்போது கோட்சேவால் சுட்டுக்கொன்ற மாகத்மா காந்தி நினைவுநாளில் என்கிற வாசகத்தை படித்ததும், மீண்டும் கூட்டத்திற்குள் குறுக்கே பாய்ந்த ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றான் என்கிற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு ஜி.ராமகிருஷ்ணன் வேறு யார் கொன்றார்கள் என்று தெரிவியுங்கள். கோட்சேதான் கொன்றான் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு தண்டனையே விதித்துள்ளது உங்களுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினர்.

ஆனால் இதெல்லாம் எங்களுக்கு தெரியவேண்டியதில்லை. கோட்சே, இந்து போன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என உதவி ஆணையர் சுகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா ஆகியோர் தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.