ஈஷா மஹாசிவராத்திரி விழா; பிரம்மாண்ட ஏற்பாடு - குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு!

Coimbatore Festival
By Sumathi Mar 05, 2024 06:04 AM GMT
Report

மார்ச் 8-ல் ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.

மஹாசிவராத்திரி

ஈஷாவில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

isha

சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறவுள்ளது.

அனுமதி பெறவில்லை என சொன்ன தமிழக அரசு; ஒப்புதல் இருக்கிறது - ஈஷா பதில்

அனுமதி பெறவில்லை என சொன்ன தமிழக அரசு; ஒப்புதல் இருக்கிறது - ஈஷா பதில்

 குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

மேலும், இவ்விழாவை நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்ள பல இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. அதில், பிரபல பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட 36 இடங்களில் நேரலை ஒளிப்பரப்பாக கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.