மனைவியின் கழுத்தறுத்த கணவன்: பட்டப்பகலில் நடந்த கொடூரம்
கர்நாடகாவில் பட்டப்பகலில் மனைவியை கொலை செய்து விட்டு கார் ஏற்றிய கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியை சேர்ந்தவர் அக்ஷயா இவரது மனைவி சாகேலி, இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் காரில் கர்நாடகாவில் உள்ள தேவல் கானாப்பூர் கோயிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது கலபுரகி மாவட்டத்தின் பலுர்கி கிராமத்தின் எல்லைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கடும் கோபமடைந்த அக்ஷயா, மனைவி சாகேலியை காரில் இருந்து இறக்கிவிட்டு மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.
அதோடு நிறுத்தாமல் சாகேலியின் உடல் மீது காரை ஏற்றியுள்ளார், இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சாகேலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தலைமறைவான அக்ஷயாவை தேடி வருகின்றனர், முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
தேசியப் பாடல் போட்டி ஸ்வர மஞ்சரி - 2026 இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்! IBC Tamil
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan