தண்டவாளம் அருகே டிக்டாக் செய்த இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு - பதைபதைக்கும் வீடியோ
மகாராஷ்டிராவில் ஓடும் ரயில் அருகே வீடியோவுக்காக போஸ் கொடுத்த இளைஞர் ஒருவர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின், நாக்பூர் இட்டார்சி பகுதியில், சஞ்சு சௌரே என்ற 22 வயது இளைஞர் ஒருவர், செல்பி மோகத்தாலும், வீடியோ மோகத்தாலும் ஓடும் ரயில் அருகில் போஸ் கொடுத்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதாமாக வேகமாக வந்த அந்த சரக்கு ரயில் இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இது போன்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபட கூடாது என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்த அவரது நண்பர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.