வாட்ஸ்அப் சாட்; நடத்தையில் சந்தேகம் - தாயாரை கோடாரியால் வெட்டி கொன்ற 17வயது மகன்!

India Maharashtra Crime Death
By Jiyath Aug 22, 2023 08:10 AM GMT
Report

தாயாரை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகம்

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் 17 வயது மகனுக்கு அவரின் 35 வயதான தாயாரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தாயாருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது தாயருடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது தாயார் செல்போனிலிருந்து யாருக்கோ மெசேஜ் அனுப்பியுள்ளார்.

தயார் கொலை

தனது தாயாரின் நடத்தையில் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த மகனுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகன் கோடாரியை எடுத்து தனது தாயாரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார்.

வாட்ஸ்அப் சாட்; நடத்தையில் சந்தேகம் - தாயாரை கோடாரியால் வெட்டி கொன்ற 17வயது மகன்! | Maharashtra Teen Boy Kills Mother In Palghar

இதில் படுகாயம் அடைந்த தாயாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது,அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மகனின் மீது கொலை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.