ரூபாய் நோட்டில் ‘சத்ரபதி சிவாஜி’ புகைப்படம் வெளியிட்ட எம்.எல்.ஏ...! - தொடரும் சர்ச்சை...!
மகாராஷ்டிராவைப் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ரூபாய் நோட்டில் ‘சத்ரபதி சிவாஜி’ இருப்பது போன்ற புகைப்படம் வெளியிட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி புகைப்படம்
சமீபத்தில், ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி புகைப்படம் அச்சிடுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிக்கையில், 'புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும். நாட்டின் பொருளாதாரநிலையை சீர்ப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்து, கடவுளின் ஆசீர்வாதமும் நமக்கு தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். இவரின் இந்த வேண்டுகோள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூபாய் நோட்டில் ‘சத்ரபதி சிவாஜி’ புகைப்படம்
இந்நிலையில், இந்திய ரூபாய் நோட்டில் ‘சத்ரபதி சிவாஜி’ இருப்பது போன்ற படத்தை மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ. நிதீஷ் ரனே வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
