முதல்வருக்கு அறைவிடுவேன் எனக் கூறிய மத்திய அமைச்சர் கைது

maharashtrapolice narayanrane
By Irumporai Aug 24, 2021 10:37 AM GMT
Report

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை நாசிக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ராணேவ்,  இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டினை கூட முதல்வர் உத்தவ் தாக்கரே அறியாதது வெட்கக்கேடானது என கூறினார்.

மேலும் சுதந்திரதின உரையின் போது சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று உதவியாளரிடம் கேட்டு பேசியதை சுட்டிக்காட்டிய நாராயண் ரானே, தான் அங்கே இருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என பேசினார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனா, அவர் மீது புனே காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த நாசிக் காவல்துறையினர் மத்திய அமைச்சர் நாராயணை இன்று மாலை கைது செய்தனர் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.