Shockig Video : திடீரென சாலையில் பைப் லைன் வெடித்து பயங்கர விபத்து..!
மகாராஷ்டிராவில் திடீரென சாலையில் பைப் லைன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைப் லைன் வெடித்து பயங்கர விபத்து
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
மகாராஷ்டிரா, யவத்மால் இன்று ஸ்கூட்டியில் ஒரு பெண் சாலையில் வந்துக் கொண்டிருந்தபோது, திடீரென பைப் லைன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சிக்கிய அப்பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
