மகாராஷ்டிராவில் சுற்றுலாப் பேருந்து திடீர் தீ விபத்து - 10 பேர் மரணம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Maharashtra
By Nandhini Oct 08, 2022 04:05 AM GMT
Report

நாசிக்கில் நேற்றிரவு பேருந்து ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, நாசிக்கில் நேற்றிரவு சுற்றுலாப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். பேருந்து தீ விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 32 பேரை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

maharashtra-nashik-bus-fire-viral-video