மார்ச் 15 முதல் 21 வரை லாக்டவுன்: அதிர்ச்சியில் மகாராஷ்டிரா

police maharashtra nagpur
By Jon Mar 11, 2021 03:52 PM GMT
Report

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நாளில் 1800 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் வரும் மார்ச் 15 முதல் 21ம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட்டுள்ளது. இதனால் வரும் 15ம் தேதி முதல் 21ம் தேதிவரை நாக்பூரில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அங்காடிகள் மட்டுமே திறந்திருக்கும்.

நோய் பரவல் அதிகரித்தால், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என அம்மாநிலமுதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கடந்த திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ளோர் பட்டியலில் 60% மகாராஷ்டிராவில் பதிவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.