கனமழை நிலச்சரிவு .. சோகத்தில் மஹராஷ்ரா!

maharashtra heavyrain
By Irumporai Jul 23, 2021 02:16 PM GMT
Report

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், மாகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்ஸில் மற்றும் அதைச் சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டது.

இதற்கிடையில், கோலாப்பூர் மாவட்டத்தில் 47 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பலத்த மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. இதைத் தொடர்ந்து மீட்புப் பணிக்காக இரண்டு கடற்படை மீட்புக் குழுக்கள் சென்றுள்ளன.

மேலும் அருகில் உள்ள பகுதியில் மூன்று வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன.மொத்தம் 32 உடல்கள் ஒரு இடத்திலிருந்தும், நான்கு உடல்கள் மற்ற இடங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன. 3

0க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் மாயமாகி உள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்தநிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் நிலச்சரிவில் காயமடைந்தோர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்