‘‘மருத்துவமனையில் படுக்கை இல்லையெனில் என் அப்பாவை கொன்று விடுங்கள்" - மகன் உருக்கம்

covid19 india maharashtra hoaspital
By Irumporai Apr 15, 2021 08:39 AM GMT
Report

மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லையென்றால் எனது அப்பாவை ஊசி போட்டு கொன்று விடுங்கள் என மகன் ஒருவர் உருக்கமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த சில வாரமக கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. இன்று மட்டும் புதிதாக நாட்டில் சுமார் 2 லட்சம் பேர் வரை புதிதாக நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த மாநிலத்தின் சந்திராபூர் பகுதியை சேர்ந்தவர் சாகர் கிஷோர். இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மகாராஷ்டிரா மருத்துவமனைகளை நாடி உள்ளார்.

அங்கு தற்போது உள்ள சூழ்நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி இருப்பதால் தனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்

இந்த நிலையில் தனது தந்தையை ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டு தனது நிலையை காணொளி மூலம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில் அப்பாவை ஆக்ஸிஜன் உதவியுடன் ஆம்புலன்ஸில் வைத்துள்ளேன். எந்த மருத்துவமனையிலும் படுக்கை வசதி இல்லை என கூறிவிட்டார்கள், என்ன செய்வதென புரியவில்லை. ஆகவே மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை எனில் அப்பாவை ஊசி போட்டு கொன்று விடுங்கள். எனக்கு வேறு வழியில்லை” என உருக்கத்துடன் தனது நிலையை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.