விமானத்தில் உள்ளது போல் அரசு பேருந்தில் பணிப்பெண்கள் - அரசின் புதிய திட்டம்

Maharashtra
By Karthikraja Oct 03, 2024 01:30 PM GMT
Report

விமானத்தில் உள்ளது போல் அரசு பேருந்துகளில் பணிப்பெண்களை பணியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

பணிப்பெண்கள்

விமானத்தில் செல்லும் போது பயணிகளின் பணிப்பெண்கள் இருப்பார்கள். விமானத்தில் ஏறும் பயணிகளை வரவேற்பது, பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவது போன்ற வேலையில் ஈடுபடுவார்கள். 

airhostess

இதே போல் அரசு சொகுசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமிக்க மகாராஷ்டிரா அரசு முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக மும்பை-புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

அதன்பின், மகாராஷ்டிராவின் மற்ற முக்கிய நகரங்களில் இயங்கும் சொகுசு பேருந்துகளுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளது. சிவ்னெரி சுந்தரி என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பெண்கள் பயணிகளை வரவேற்பது, பயணத்தின் போது உதவுவது போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவார்கள். 

ஆனால் அரசின் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், மாநிலத்தில் உள்ள அரசு பேருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள மோசமான நிலையை சரி செய்யாமல் தேவையில்லாத வேலைகளை அரசாங்கம் செய்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளது.