கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிர அரசு புதிய முயற்சி! என்ன தெரியுமா?

By Irumporai Jun 02, 2021 06:03 PM GMT
Report

கிராமங்களில் நிலவி வரும் கொரோனா பாதிப்பை குறைக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே புதிய போட்டியொன்றை அறிவித்துள்ளார்.

அதில் வெற்றி பெறுவோருக்கு, ரூ.50 லட்சம் வரை பரிசு கிடைக்குமென அவர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமப்புறங்களில் கொரோனா பரவலை தடுக்க கிராமங்களுக்கான போட்டியை மகாராஷ்டிரா அரசு இன்று அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க சில கிராமங்கள் மேற்கொண்ட முயற்சிகளை முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் பாராட்டி இருந்த நிலையில், தற்போது ''கொரோனா இல்லாத கிராமம்'' என்ற போட்டியை அறிவித்துள்ளார்.

. இந்தப் போட்டியின் கீழ் ஒவ்வொரு வருவாய் பிரிவிலும் 'கொரோனா இல்லாத 3 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசு ரூ.50 லட்சம், இரண்டாவது பரிசு ரூ.25 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

போட்டியில் வெற்றிபெறும் கிராமங்களுக்கு பரிசுத் தொகைக்கு சமமான கூடுதல் தொகையும் ஊக்கமாக கிடைக்கும், மேலும் அது அந்த கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது