விவசாயியிடம் 512 கிலோ வெங்காயத்தை ₹2க்கு வாங்கிய ஏலதாரர்கள் - அதிர்ச்சி சம்பவம்..!

India Maharashtra
By Nandhini Feb 24, 2023 07:10 AM GMT
Report

மகாராஷ்டிராவில் விவசாயி 70 கி.மீ. பயணித்து 512 கிலோ வெங்காயத்தை ₹2க்கு வாங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்காயத்தை ₹2க்கு வாங்கிய ஏலதாரர்கள்

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், பார்ஷி தாலுகா, போர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர துக்காராம் சவான். 58 வயதாகும் இவர் ஒரு வெங்காய விவசாயி.

சமீபத்தில் தான் இவர் அறுவடை செய்த 512 கிலோ வெங்காயத்தை ஏலம் செய்வதற்காக சோலாப்பூர் ஏபிஎம்சிக்கு 70 கிலோமீட்டர் பயணம் செய்து எடுத்துச் சென்றார். ஆனால் வெங்காயத்தை கிலோ ரூ.1 க்கு மட்டுமே விற்க முடிந்ததாம்.

தரம் குறைந்த வெங்காயம் எனக் கூறி கிலோ ஒன்றுக்கு ரூ.1க்கு ஏலம் எடுத்துள்ளனர். ஏற்றுமதி செலவு, ஆள் கூலி, போக்குவரத்து செலவு ஆகிய காரணங்களை சொல்லி ரூ.512ல் இருந்து ரூ.509.50 எடுத்துக்கொண்டதாக விவசாயி ரூ.2க்கான காசோலை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 ரூபாயை கூட இந்த ராஜேந்திர துக்காராம் 15 நாட்களுக்குப் பிறகுதான் பணமாக்க முடியும்.

maharashtra-farmer-sell-512-kg-onions-gets-rs-2

விவசாயி மனவேதனை

இது குறித்து விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் கூறுகையில், எனக்கு வெங்காயத்திற்கு ஒரு கிலோவுக்கு 1 ரூபாய் தான் கிடைத்துள்ளது.

போக்குவரத்துக் கட்டணம், தலை ஏற்றுதல் மற்றும் எடை போடுதல் ஆகியவற்றுக்கான மொத்தத் தொகையான 512 ரூபாயிலிந்து ஏபிஎம்சி வர்த்தகர் மேலும் 509.50 ரூபாயை கழித்துக் கொண்டார்கள். நான் சம்பாதித்தது வெறும் 2 ரூபாய் தான். எனக்கு வேதனையாக உள்ளது என்று தெரிவித்தார்.