3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர், எம்எல்ஏக்கள் - நடந்தது என்ன?

Nationalist Congress Party Shiv Sena BJP Maharashtra
By Karthikraja Oct 06, 2024 06:30 AM GMT
Report

துணை சபாநாயகர் மற்றும் எம்எல்ஏக்கள் 3 வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை சபாநாயகர்

மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

Narhari Sitaram Zirwal

அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நரஹரி சீதாராம் சிர்வால்(Narhari Sitaram Zirwal) துணை சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.

மந்த்ராலயா

இந்நிலையில் மகாராஷ்டிராவின் தலைமை செயலகமான மந்த்ராலயாவின் 3வது மாடியில் இருந்து, துணை சபாநாயகர் நரஹரி சீதாராம் சிர்வால் மற்றும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் கீழே குதித்துள்ளனர். 

ஆனால் அங்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் அவர்கள் விழுந்ததால் உடனடியாக காயம் ஏதுமின்றி மீட்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் மந்திராலயாவுக்கு வெளியே ஒரு நாள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

தங்கர் சமூகத்தை பழங்குடி(ST) பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தாங்கள் பல மாநிலங்களில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக உள்ளோம் எனவே பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென தங்கர் சமூக மக்கள் கூறி வருகின்றனர்.