நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையை துண்டித்த கொடூர கணவன் : மஹாராஷ்டிராவில் பரபரப்பு
மஹாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டம் மதிரன் பகுதியை சேர்ந்தவர்கள் 25 வயதான ராம்பால் மற்றும் 27 வயதான பூனம் தம்பதி.
இருவருக்கும் 6 மாதத்திற்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால்,இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ராம்பால், பூனம்மை ஒரு லாட்ஜிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இருவரும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ராம்பால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ளார்.
மேலும், மனைவியின் தலையை வெட்டி ராம்பால் அதை பையில் வைத்து யாருக்கும் தெரியாமல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாட்ஜை விட்டு தப்பி சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக அறை திறக்காததால் சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர் காலை அறையை திறந்தபோது அங்கு தலை துண்டிக்கப்பட்டு நிர்வாணமான நிலையில் பெண்ணின் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் கணவன் ராம்பாலை இன்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.