ராகுல்காந்தி சாலையில் நடமாட முடியாது - முதலமைச்சர் பகிரங்க மிரட்டல்!

Rahul Gandhi Maharashtra
By Sumathi Mar 26, 2023 03:25 AM GMT
Report

ராகுல்காந்தி இதுபோன்று தொடர்ந்து பேசினால் அவர் தெருவில் நடமாடுவது கடினமாகிவிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி

தகுதி நீக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ஒரு முறை அல்ல, நிரந்தரமாக என்னைத் தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப்போவதில்லை. நான் பேசுவதைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். அதானி பற்றி நான் பேசும்போது, அவரின் கண்களில் பயத்தைப் பார்த்தேன்.

ராகுல்காந்தி சாலையில் நடமாட முடியாது - முதலமைச்சர் பகிரங்க மிரட்டல்! | Maharashtra Cm Shinde Threatened Rahul Ganthi

பிரதமரின் அச்சத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு உண்மையைப் பேசுவதில் மட்டுமே விருப்பம் உள்ளது. அதை தொடர்வேன். மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி. " என்றார்.

மிரட்டல்

இந்நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, "சாவர்க்கர் மகாராஷ்டிராவின் தெய்வம் மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் தெய்வம். ஆனால், ராகுல் காந்தி அவரை அவதூறாகப் பேசியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த செயலுக்கு அவரைப் பற்றிய எந்த விமர்சனமும் குறைவாகவே இருக்கும். மன்னிப்பு கேட்பதற்கு தான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று கூறியுள்ளார்.

சாவர்க்கரைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார்? இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் இயற்றிய சட்டத்தின் மூலம் ராகுல் காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ் மற்றும் பலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் ஆனால், அப்போது இதுபோன்றும் எதுவும் நடக்கவில்லை.

அப்போது ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா? ராகுல்காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தையும் அவதூறாகப் பேசியுள்ளார். தொடர்ந்து அதே தொனியில் பேசி வருகிறார். தொடர்ந்து பேசினால், சாலையில் நடக்கவே சிரமமாக இருக்கும் என்பதை அவருக்கு சொல்ல விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.