மாற்றுத்திறனாளி சிறுவனை கற்பழித்த சைகோ - ஆண்கள் கழிப்பறையில் அரங்கேறிய கொடூரம்!
மகாராஷ்டிராவில் ஒரு ஊனமுற்ற சிறுவனை பாலியன் வன்கொடுமை செய்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் 7 வயது ஊனமுற்ற சிறுவன் வசித்து வந்தார். அந்த சிறுவன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பொதுகழிப்பறைக்குள் சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 33 வயது வாலிபர் ஒருவர், அந்த சிறுவனை கழிப்பறையில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் பெற்றோரிடம் புகார் அளிக்க, போலீசாரின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு ஆறு மாதங்களாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த வாலிபருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.