அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் 13 பேர் உயிரிழப்பு : சோகத்தில் மகாராஷ்டிரா

Maharashtra
By Irumporai Apr 17, 2023 03:00 AM GMT
Report

மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

  மகாராஷ்டிரா விழா

மகாராஷ்டிரா மாநிலத்தில் நவிமும்பை நகரில் நேற்று மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிடோர் பங்கேற்றனர். இந்த விழா மிக பிரம்மாண்டமாக திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.

அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் 13 பேர் உயிரிழப்பு : சோகத்தில் மகாராஷ்டிரா | Maharashtra Bhushan Award 7 Die

 வெயிலின் தாக்கம்

விழா நடைபெற்ற நவிமும்பை பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. சுமார் 100 ஃபாரான்ஹீட் வெப்பநிலையை தாண்டி அங்கு வெப்பநிலை பதிவாகி இருந்தது. திறந்தவெளி மைதானத்தில் வெகுநேரமாக பொதுக்கூட்ட விழா நடைபெற்றதால், அங்கிருந்த பலருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அளவுக்கு அதிகமான வெயிலின் தாக்கத்தால் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று வரை 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. மேலும், 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இருந்தும் மருத்துவமனையில் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்க அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தங்கள் இரங்கலையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.