திருமணமாகவில்லை என அருள்வாக்கு கேட்ட பக்தர்கள் - சிறுநீரை குடிக்க வைத்த சாமியார்
அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஏஐ யுகத்திலும், இன்றும் மக்கள் மூடநம்பிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி ஷம்பாஜி நகர் மாவட்டத்தில் சஞ்சய் பகரே(Sanjay Pagare), தன்னை தானே பாபா என அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
இவர், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பெற உதவுவேன், நோய்களைக் குணப்படுத்துவேன் என தன்னை விளம்பரப்படுத்திக்கொள்கிறார்.
சிறுநீரை குடிக்க வைத்த அவலம்
இதனை நம்பி இவரிடம் அருள் வாக்கு கேட்டு வரும் மக்களை, சடங்குகள் என்ற பெயரில் சித்திரவதை செய்துள்ளார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும், குச்சிகளால் அடிப்பது, அவர்களது சொந்த காலணிகளை அவர்களின் வாய்களில் திணிப்பது, காலால் தொண்டையில் மிதிப்பது போன்ற கொடுமைகளை செய்துள்ளார்.
மேலும், சடங்கின் ஒரு பகுதி எனக்கூறி சிலரை தனது சிறுநீரை குடிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
மூடநம்பிக்கை எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர்கள, ரகசிய கேமராக்களைப் பயன்படுத்தி ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய பிறகு இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஆர்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.