சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டது - 10 பேர் படுகாயம்...!
இன்று சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டது
மகராஷ்டிர மாநிலம், ஜோத்பூரிலிருந்து பாந்த்ரா நோக்கிச் சென்ற சூர்யநகரி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டது. இந்த சம்பவம் பாளை ராஜ்கியாவாஸ் அருகே நடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சுமார் 10 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
