சலூனில் முடியை சிறியதாக வெட்டியதால் ஆத்திரம் - 16வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்
சலூன் கடைகாரர் தனது முடி சிறிதாக இருக்கும்படி வெட்டியதால் சிறுவன் தற்கொலை செய்துள்ளார்.
முடி திருத்தம்
மகாராஷ்டிரா, பாந்தரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சத்ருகன் பதக் என்ற 13 வயது சிறுவன் வசித்து வந்தார். 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் தனது உறவுக்கார இளைஞருடன் முடி திருத்தம் செய்ய சலூனுக்கு சென்றுள்ளார்.

அங்கு ஸ்டைலாக முடிவெட்ட சொல்லி சலூன் கடைக்காரரிடம் கூறியுள்ளார். ஆனால் முடி சிறியதாக இருக்கும் படி வெட்டியுள்ளார். சிறூவன் எதிர்பார்த்தபடி வரவில்லை என கடும் மனவருத்ததில் வீடு திரும்பியுள்ளார்.
தற்கொலை
அவரை கவனித்த பெற்றோரும், 2 அக்காக்களும் சிறுவனை சமாதானம் செய்துள்ளனர். இருப்பினும், வேதனையில் இருந்த சிறுவன் வீட்டில் உள்ள அனைவரும் தூங்க சென்ற பின் இரவில் வீடு இருந்த 16வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
இதனைப் பார்த்து பதறிய செக்யூரிட்டி சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil