திருப்புமுனையை ஏற்படுத்திய மாநாடு சிம்புவுக்கு குவியும் பட வாய்ப்பு
தமிழ் சினிமாவில் படு பிசியாக நடித்து வரும் சிம்பு, சமீபத்தில் நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் ஒப்பந்தமான நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வந்த சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதால், அவரின் மார்க்கெட் தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
நடிகர் சிம்பு கைவசம் கவுதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’, ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் ‘பத்து தல’, கோகுல் இயக்கும் கொரோனா குமார் மற்றும் ஹன்சிகாவுடன் மஹா போன்ற படங்கள் உள்ளன.
இவ்வாறு படு பிசியாக நடித்து வரும் சிம்பு, சமீபத்தில் நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் ஒப்பந்தமான நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.
அதன்படி கற்றது தமிழ், தரமணி மற்றும் தேசிய விருது வென்ற தங்க மீன்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்கி வரும் ராம், அப்படத்தை முடித்த பின்னர் சிம்புவின் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.
இதுதவிர மிஷ்கின், சுசீந்திரன், நெல்சன் போன்ற இயக்குனர்களிடமும் சிம்பு கதை கேட்டு உள்ளாராம். குறிப்பாக மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் சிம்பு மிகுந்த உற்சாகத்தில் உள்ளராம்.