மகாளய அமாவாசை 2024: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சரியான நேரம் இதுதான்!
மகாளய பட்சத்தின் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வழிபட வேண்டும்.
மகாளய அமாவாசை
அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள்.நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம் என்று கூறுவார்கள்.மேலும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்க வேண்டிய நாள்.
பொதுவாக மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு மகாளய அமாவாசை.அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை வருகிறது. அக்டோபர் 01ம் தேதி இரவு 10.35 மணி முதல் அக்டோபர் 03ம் தேதி அதிகாலை 12.34 வரை அமாவாசை திதி உள்ளது.
நேரம்
மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற நேரமாகக் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது.
முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் இடுவதற்கு ஏற்ற நேரமாகக் காலை 11 மணி முதல் 11.45 வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர்த்து பகல் 01.30 மணிக்கு பிறகு பகல் 2 மணிக்குள்ளான நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம்.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
