மகாளய அமாவாசை : கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

Tamil nadu
By Irumporai Sep 25, 2022 03:45 AM GMT
Report

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் மிக முக்கியமாக சொல்லகூடியது தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை.

 மகாளயபட்ச அமாவாசை

  இந்த மூன்று அமாவாசைகளிலும் தவிர்க்காமல் நாம் செய்யும் பித்ரு வழிபாடானது அவர்களது ஆசிர்வாதத்தை நிறைவாக அளிக்கும். அப்படி சிறப்புமிக்க அமாவாசை தான் மகாளயபட்ச அமாவாசை என்னும் புரட்டாசி அமாவாசை.

இந்த அமாவாசை என்பது ஆவணி மாத பெளர்ணமிக்கு அடுத்து பிரதமையில் தொடங்கி அமாவாசை வரை உள்ள நாட்களே. மகாளய பட்ச காலத்தில் நிறைவு நாளே மகாளயபட்ச அமாவாசை.

 இதில் மகாளயம் பட்சை என்பதின் அர்த்தம் பட்சம் என்றால் பதினைந்து ஆகும். மகாளயம் என்பது பித்ருக்களை குறிக்கும். அதனால் தான் இந்த புரட்டாசி அமாவாசை மகாளயபட்ச அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

மகாளய அமாவாசை : கடற்கரையில் குவிந்த பக்தர்கள் | Mahalaya Amavasya 2022 In Tamil

இந்த காலத்தில் நமது முன்னோர்கள் அவர்களது பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு வருகிறார்கள். நாம் இந்த நாளில் அவர்களை வணங்கும் போது நமது வழிபாடுகளை கண்டு மகிழ்கிறார்கள். நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

இத்தகைய நாளில் நீங்கள் உங்கள் முன்னோர்கள வணங்கினால் அரிய பேறும் கிட்டும். இதன் மூலம் முன்னோர்களின் சாபத்தை பெற்றிருந்தாலும் அதிலிருந்து விடுபட முடியும்.

நீர்நிலைகளில் பக்தர்கள் தர்ப்பணம் 

இந்த நிலையில் மகாளய அமாவாசை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் தர்ப்பணம் செய்து புனித நீராடி வருகின்றனர்.

ராமேஸ்வரம்: ராமநாத கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை: மாகாளய அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரபரணி நதியில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

தென்காசி: பண்ணிட்டு குற்றாலத்தில் ஏரளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

மகாளய அமாவாசை : கடற்கரையில் குவிந்த பக்தர்கள் | Mahalaya Amavasya 2022 In Tamil

தேனி: புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு வைகை ஆற்றில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இன்று மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரங்கணக்கான மக்கள் காலை முதலே  தீர்த்த கடலில் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.