நான் சொல்ல விரும்புவது அதுமட்டும் தான் - ரவீந்தர் குறித்து மகாலெட்சுமி!
ரவீந்தரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து மகாலெட்சுமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ரவீந்தர் பிறந்தநாள்
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரோடக்சன்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா டைவர்ஸ் பண்ணியிருப்பேன் - வைரலாகும் மகாலெட்சுமி குறித்த ரவீந்தரின் தகவல்!
ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில், ரவீந்தரின் பிறந்தநாளுக்கு மகாலெட்சுமி வாழ்த்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரவீந்தர், ஒவ்வொரு விருப்பத்தில் இருந்தும் உண்மையான அன்பையும் அக்கறையும் நான் உன்னிடம் கண்டேன்.
இப்போது நான் உறுதி அளிக்கிறேன். மீதமுள்ள 364 நாட்களும் உன்னை கவனித்துக் கொள்வேன். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் இன்று சிரிக்கவில்லை.
அதைவிட இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குடும்பத்திற்காக நேசித்து வாழுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.