அப்படி மட்டும் செய்யாதீங்க - ரவீந்தர் செயலால் மனம் நொந்த மகாலெட்சுமி!
நடிகை மகாலெட்சுமி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
மகாலெட்சுமி
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
சமீபத்தில் தான் தங்களின் 6-வது மாத திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இருவரும், கோவில், ஹோட்டல் என பொது இடங்களில் ஒன்றாக வலம் வருகின்றனர். அவ்வப்போது முன்னணி யூடியூப் ஊடகங்களிலும் பேட்டி அளித்து வருகின்றனர்.
விவாகரத்து?
அது குறித்த புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், ரவீந்தர் சோக பதிவொன்றை பதிவிட்டு தான் தனியே இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அதனால் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவியது.
இந்நிலையில், மகாலெட்சுமி புருஷா, இவ்வாறு தனியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட வேண்டாம் என கூறினேன் அல்லவா., இனி இவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.