இணையதளத்தில் பிரமிப்பூட்டும் மஹாகாலேஷ்வர் கோயிலின் அழகிய வீடியோ வைரல்...!

Viral Video Madhya Pradesh
By Nandhini Oct 17, 2022 12:01 PM GMT
Report

இணையதளத்தில் பிரமிப்பூட்டும் மஹாகாலேஷ்வர் கோயிலின் அழகிய வீடியோ வைரலாகி வருகிறது. 

அழகிய மஹாகாலேஷ்வர் கோயில்

மகாகாலேஸ்வரர் கோயில் மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயிலாகும்.

இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் இருக்கிறது. இது சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயில் ஆகும்.

கோவிலை திறந்து வைத்த பிரதமர் மோடி

கடந்த 11ம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இக்கோவிலை திறந்து வைத்த பிரதமர் மோடி, மகாகல் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனையடுத்து, 'ஸ்ரீ மஹாகல் லோக்' என்ற தலைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Mahakaleshwar Jyotirlinga

வைரலாகும் அழகிய வீடியோ

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது, இக்கோயில் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்கோயிலின் அழகில் மெய்மறந்து விடுகின்றனர்.

அந்த அளவிற்கு அழகிய சிற்பங்களாலும், இரவு நேரத்தில் வண்ண, வண்ண விளக்குகளாலும் இக்கோவில் காட்சியளிக்கிறது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.