மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவு..45 நாட்களில் புனித நீராடியவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவு பெற்றது.
மகா கும்பமேளா
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது.
இதில் சாதுக்கள், அகோரிகள் முதல் அரசியல் தலைவர்கள் ,சினிமா பிரபலங்கள் பல்துறை வல்லுநர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

கங்கை நீரில் மனித,விலங்கு கழிவு..புனித நீராடும் தண்ணீர் குளிப்பதற்கு உகந்தது இல்லை -அதிர்ச்சி தகவல் !
மேலும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ளக் கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்த நிலையில், ரயில்களில் ஏசி பெட்டிகளில் கண்ணாடி உடைப்பு, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் போன்ற சம்பவங்களும் நிகழ்ந்தன.
நிறைவு
இதனையடுத்து கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிப்பதாகக் கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் நேரில் வர முடியாதவர்கள் தங்களது புகைப்படத்தை அனுப்பி வைத்து அதனை நீரில் நனைத்தும், வீடியோ காலில் அழைத்து தண்ணீரில் மூழ்கி எடுத்த நிகழ்வுகளும் அரங்கேறின.
தொடர்ந்து ஆறு வாரங்களாக விமர்சையாக நடைபெற்று வந்த கும்பமேளா மகாசிவராத்திரியான நேற்றுடன் நிறைவடைந்தது. 45 நாட்களில் புனித நீராட பிரயாக்ராஜில் 66 கோடியே 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித நீராடியிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.