மகா கும்பமேளாவில் 100 பேருக்கு மாரடைப்பு.. அடுத்து நடந்த அதிசயம் -அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
மகா கும்பமேளாவில் 100 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகா கும்பமேளா
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு மகா கும்பமேளா ஜனவரி 12ஆம் தேதி தொடங்கியது. மேலும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும்.
இந்த பிரம்மாண்ட திருவிழாவில் முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல கோடி பக்தர்கள் கலந்துகொண்டனர். மக்களின் தேவைகளுக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மகா கும்பமேளா தொடங்கிய நாள் முதல் இன்றுவரை அங்குக் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்கள், சுகாதார குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு பக்தர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
மாரடைப்பு
தொடர்ந்து 183 பக்தர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஐசியு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கும்பமேளாவின் மருத்துவ பிரிவின் நோடல் அதிகாரி மருத்துவர் கவுரவ் துபே கூறுகையில்,
மகா கும்பமேளா திருவிழா கலந்து கொள்ளும் பாதிக்கப்பட்ட பக்தர்களின் வசதிக்காக ஏஐ அடிப்படையில் இயங்கும் கேமராக்களுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவச் சிகிச்சை மையத்தை நாங்கள் மகா கும்பமேளாவில் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.